8803 ஆத்மானுபவ யாத்திரை.

சுனித்தாராணி தேவிதாசி. சுவிட்சர்லாந்து: ஸ்ரீ ஸ்ரீ ராதா புவனசுந்தர் ஆஸ்சிரமம், Badener strasse – 811/BK216, 8048, Zurich 1வது பதிப்பு, ஏப்ரல் 2011. (கொழும்பு: Hare Printers).

x, 92 பக்கம், வண்ணத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

தலயாத்திரை நூல். பக்தர்கள் குழாமாகச் சேர்ந்து இந்திய மண்ணில் பகவான் கிருஷ்ணரின் லீலைகள் நடந்த ஸ்தலங்களையும், சிறப்பாக பகவான் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஷேத்திரங்களையும் தரிசித்து, தங்களைப் புனிதப்படுத்திக்கொள்ளவும், பகவானின் லீலைகளை நினைந்து அனுபவிக்கவுமாகச் சென்று வந்தவரின் தெய்வீக அனுபவப் பகிர்வு இந்நூலாகும். கீதாசாரியனாக பகவான் தர்மத்தை நிலைநாட்ட கீதையை உபதேசித்த இடமான குருஷேத்திரத்திலிருந்து இவர்களது யாத்திரை தொடங்குகின்றது. ஹரித்துவார், ரிஷிகேஷ் ஆகிய இடங்களின் தரிசனமும் இந்நூல்வழி பெறமுடிகின்றது. நூலாசிரியர், தாம் பக்தியில் ஆழ்ந்தவேளையில் ஆழ்வார்கள் அக்காலத்தில் எப்படியெல்லாம் அதை அனுபவித்தார்கள் என்பதையும் சேர்த்துச் சொல்கின்றார். குழந்தையாக கண்ணனை பெரியாழ்வார் அனுபவித்ததை, நூலாசிரியர் தானும் பிருந்தாவனத்திலும், கோகுலத்திலும் நின்று அனுபவித்து அதனையும் இணைத்து எழுதுகின்றார். அவ்வப்பிரதேசங்களில் நிகழ்ந்ததாகக் கருதப்படும் ஆன்மீகக் கதைகளையும் இடத்துக்கேற்ப சேர்த்து இந்நூலை சுவைமிக்கதாக்கியிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்