8809 மாணவர் தேசப்படப் புத்தகம் இலங்கை.

ரி.சோமசேகரம் (பிரதம ஆசிரியர்), எம்.பீ.பெரேரா, எம்.பி.ஜீ.த.சில்வா, எச்.கொடல்லவத்த, யோகா இராசநாயகம், ரி.சபாரத்தினம் (ஆசிரியர் குழு). தெகிவளை: அர்ஜுனா கொன்சல்ற்றிங் கொம்பனி, 60, பாடசாலை வீதி, 1வது பதிப்பு, ஆனி 1999. (ஒறுகொடவத்தை: குணரத்ன ஓப்செற் லிமிட்டெட், 215/10, அவிசாவளை வீதி).

iv, 60 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 225., அளவு: 29.5×21 சமீ., ISBN: 955-9276-08-5.

இத்தேசப்படப் புத்தகம், 1997இல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட Arjuna’s Atlas of Sri Lanka என்ற நூலின் சுருக்கிய தமிழ் வடிவமாகும். மூலநூலில் 57 புவியியல்சார் விடயங்கள் 220 பக்கங்களில் இடம்பெற்றிருந்தது. இச்சுருக்கிய பதிப்பில் 41 விடயங்கள் 60 பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. கடல் வலயங்கள், தரைத்தோற்றமும் வடிகாலமைப்பும், மண், காலநிலை, மேற்பரப்பு நீர், ஈரநிலங்கள், தரைக்கீழ் நீர், கனிப்பொருள் வளங்கள், காடுகள், விலங்கினம், நிர்வாகப் பிரிவுகள், சனத்தொகை, நகரக் குடியிருப்புகள், வீடமைப்பு, சுகாதாரசேவை, கல்வி நிறுவனங்கள், சூழலும் இயற்கை இடையூறுகளும், வேலை, ஈர இடை உலர்வலயங்கள், நிலப்பாவனை, நெற்செய்கை, உப பயிர்கள், தேயிலை, இறப்பர், தென்னை, ஏனைய ஏற்றுமதிப்பயிர்கள், விலங்கு வேளாண்மை, பாரிய நீர்ப்பாசனக் குடியேற்றத் திட்டங்கள்,  மகாவலித்திட்டம், மீன்பிடித் தொழில், உற்பத்தித் தொழில்கள், ஆடைத் தொழில், இரத்தினக்கல் தொழில், போக்குவரத்து, சக்தி, உல்லாசப் பயணத்துறை, உள்நாட்டு வர்த்தகம், வெளிநாட்டு வர்த்தகம், தேர்தல்கள், உலகின் தோற்றம், உலக நாடுகள் அகரவரிசை அட்டவணை தேசியக் கொடிகள் ஆகிய 60 விடயங்களை இத்தேசப்படத் தொகுதி உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  129292).

ஏனைய பதிவுகள்

Casino Tillägg 2024

Content Hos En Casino Utan Konto Prova Tryggt Sam Säkert Gällande Casino Tillsamman Svensk perso Koncessio Rivalite Röra om Nya Casinon Inom Sverige Uttagsgränser Förteckning