8846 சேர். கு. முத்துக்குமாரசுவாமி: (இலங்கைத் தமிழ்ச் சுடர்மணிகள் தொடர் 13).

க.குமரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு  6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

48 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-366-2.

சேர். குமாரசுவாமி முத்துக்குமாரசுவாமி (1834-1879) அவர்கள் பற்றிய இந்நூல் திரு. ச.அம்பிகைபாகன் அவர்கள் எழுதிய கலாயோகி ஆனந்த குமாரசுவாமி (1978), திரு. சின்னத்துரை குமாரசுவாமி எழுதிய மானிப்பாய் தந்த மாணிக்கம் சேர் முத்தக்குமாரசுவாமி அவர்கள் வாழ்க்கை வரலாறு, ராதிகா குமாரசுவாமி அவர்கள் எழுதிய Sir Muttu Coomaraswamy: British Shadows and Sri Lankan Dreams ஆகிய மூன்று நூல்களிலும் இடம்பெற்ற விடயங்களை உள்வாங்கித் தொகுத்துச் செவ்விதாக்கப்பெற்றுள்ளது. வி.முத்துக்கமாரசுவாமி எழுதிய Founders of  Modern Ceylon, எம்.வைத்திலிங்கம் எழுதிய Sir Ponnambalam Ramanathan ஆகிய  இரண்டு நூல்களும் இத்தொகுப்பிற்குப் பின்னணித் தகவல்பெற  உதவியுள்ளன. தந்தையார் ஆ.குமாரசுவாமி முதலியார், கல்வியும் தொழிலும், இங்கிலாந்துப் பயணம், சட்ட நிரூபண சபைப் பிரதிநிதி, திருமணம், எதிர்பாராத மரணம், முத்துக்குமாரசுவாமியும் நாவலரும், முத்துக்குமாரசுவாமியின் பங்களிப்புகள் ஆகிய எட்டுத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக, சேர். கு. முத்துக்குமாரசுவாமி வாழ்வில் முக்கிய திகதிகள், சேர். கு. முத்துக்குமாரசுவாமியின் எழுத்துக்கள், கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி (கி.பி.1877-1947), சேர். கு. முத்துக்குமாரசுவாமி மொழிபெயர்த்த தாயுமானவர் சுவாமிகளின்  அருட்பாடல்கள், முத்துக்குமாரசுவாமி பற்றி உதயதாரகை ஆகிய ஐந்து தகவல்களும் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்