8852 தியாகத்தின் பாதையில் திலீபனுடன் 12 நாட்கள்.

மு.வே.யோ.வாஞ்சிநாதன். சென்னை 600 078: தோழமை வெளியீடு, 5D, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், 1வது பதிப்பு, டிசம்பர்; 2010. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை).

96 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 55., அளவு: 18×11 சமீ., ISBN: 978-93-80369-10-5.

இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளில் நிலைகொண்டிருந்த வேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்-மாவட்ட அரசியற் பிரிவுப் பொறுப்பாளர் திலீபன் (பார்த்திபன் இராசையா) 15.9.1987 அன்று நல்லூர் கந்தசாமி கோயிலின் முன்பாக ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டு 26.9.1987இல் ஈகச்சாவை அடைந்தார். அந்தப் பன்னிரு நாட்களும் அவருடன் மேடையில் இருந்தவரான  கவிஞர் மு.வே.யோ.வாஞ்சிநாதன், அக்காலகட்டத்தை, தான் பார்த்து அனுபவித்த சோக நிகழ்வினை  இந்நூலில் பதிவாக்கியிருக்கிறார். இந்நூலின் முதற்பதிப்பு 26.9.1988 அன்று சென்னையில், வை.கோபால்சாமி அவர்களின் தலைமையில் வெளியிடப்பட்டவேளை, ஆசிரியர் சென்னை மத்திய சிறையில் இருந்தார். 1992இல் இந்நூலின் மீள்பதிப்பு வெளியாகியது. தற்போது 2010இல் தோழமை வெளியீடாக-முதற்பதிப்பு எனக் குறிப்பிடப்பட்டு வெளிவருகின்றது.

ஏனைய பதிவுகள்