மனோன்மணி சண்முகதாஸ். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், இல. 39, 36வது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 10: குமரன் அச்சகம், இல. 39, 36வது ஒழுங்கை).
26 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 195.00, அளவு: 29.5×21.5 சமீ., ISBN: 978-955-1997-38-0.
இந்நூல் சிறாரின் கற்றல் கற்பித்தலை ஊக்குவிக்கும் இலக்கோடு எழுந்தது. பிறப்பு, கல்வி, ஆங்கிலக் கல்விப் பயிற்சி, சமயப்பணி, கல்விப்பணி, தமிழ்ப்பணி, நாவலரின் மக்கள் பணி, நாவலர் சிறப்பியல்புகள் ஆகிய தலைப்புகளில் சிறுசர்களுக்கேற்ற எளிமையான நடையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 1969இல் வெளிவந்த நாவலர் மலரில் இடம்பெற்றுள்ள சில படங்களும் சிறுவர்களுக்கான மேலதிக விளக்கம் கருதிச் சேர்க்கப்பட்டுள்ளன. எஸ்.சந்திரசேகரின் சித்திரங்கள் இச் சிறுவர் நூலுக்கு மெருகூட்டுகின்றன.