8892 வேலணையூர் பண்டிதை த.வேதநாயகி-ஆக்கங்கள், ஆராய்ச்சி.

சரவணமுத்து கந்தவேள் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: த.வேதநாயகி நூற்றாண்டு விழாக் குழு, கஸ்தூரி திலகம், இல. 28/1, நாவலடி ஒழுங்கை, திருநெல்வேலி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (யாழ்ப்பாணம்:  பாரதி பதிப்பகம், இல.430, கே.கே.எஸ். வீதி).

xxxii, (24),  272 பக்கம், புகைப்படங்கள், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-54772-0-8.

இந்நூலில் வேலணையூரைச் சேர்ந்த பண்டிதை தம்பு வேதநாயகி (1912-1994) அவர்கள் தனது 16ஆவது வயதிலேயே மதுரைத் தமிழ்ப் பண்டித பரீட்சையில் சித்தியடைந்தவர். திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையில் 1949-50 காலகட்டத்தில் ஆசிரிய பயிற்சி பெற்றவர். வேலணை மேற்கு நடராச வித்தியாலயத்தில் ஆசிரியப் பணியாற்றியவர். அவரது வாழ்வும் பணியும் பற்றிய தொகுப்பாக மலர்ந்துள்ள இந்நூலின் பிரதான ஆய்வுக்கட்டுரை “பண்டிதை தம்பு வேதநாயகி அவர்களின் சமய தத்துவப் பணிகள்- ஓர் ஆய்வு என்பதாகும். சுதர்சினி யசோதாஸ் மேற்கொண்ட இவ்வாய்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல் சிறப்புக் கலைமாணித் தேர்விற்காக இந்து நாகரிகத் துறைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. இரண்டாவது பிரிவு வேலணை பண்டிதை தம்பு வேதநாயகியின் ஆக்கங்களைக் கொண்டது. தமிழ்நாடு விழைவுறூஉந் தகைசால் மெல்லியல், பெண்மக்கள் விலங்கு, மருள் நீக்கும் மருத்துவம், பயனிலை, மூப்பு, மாங்கல்யம், தலைவர் மகிழுந் தமிழ், உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளி, கந்தபுராணங் காக்கும் கலாசாரம், லட்சிய கலாநிதி, தேசிகர் நாயகர் வாழ்க, சைவம் பிரகாசிக்க, எங்கள் ஞான குருமணி, மௌன தவமுனி ஆகிய 14 இலக்கியக் கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. பண்டிதை த.வேதநாயகி அவர்கள் தமது வம்சாவளி உறவினர் பிரமுகர் பற்றி எழுதிய விடயங்கள் பல்வேறு நினைவுமலர்களிலுமிருந்து தொகுக்கப்பெற்றவை பின்னிணைப்பு -1 ஆக இடம்பெற்றுள்ளன. பின்னிணைப்பு -2 இல் பண்டிதை வேதநாயகியின் உறவினர்கள் பற்றிய பல்வேறு மலர்களிலும் வெளிவந்ததும் பிறரால் எழுதப்பெற்றதுமான கட்டுரைகள் தொகுக்கப்பெற்றுள்ளன. வம்சாவளி, வேலணைத்தீவு வரைபடங்கள் என்பனவும் இந்நூலின் இறுதிப் பக்கங்களில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Verbunden Poker Österreich

Content Spielerschutz Unter anderem Verhütung Von Spielsucht Von Nachfolgende Malta Gaming Authority Die Beliebtesten Zahlungsmethoden Auf Online Pokerseiten Über Echtgeld Reload Maklercourtage Best Us Tatsächlich