சாரல் நாடன் (மூலம்), க.குமரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
56 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-373-0.
இலங்கைத் தமிழ்ச் சுடர்மணிகள் வரிசையில் 18ஆவது நூலாக வெளிவந்திருக்கும் இந்நூல், மலையக அரசியல் மற்றும் இலக்கிய முன்னோடியான கண்ணப்பன் வேல்சிங்கம் வேலுப்பிள்ளை (1914-1984) அவர்களின் வாழ்வும் பணிகளும் பற்றிய விரிவான தகவல்களை உள்ளடக்கியது. பிறப்பம் வளர்ப்பும், முதலாவது நாடாளுமன்றத்தில், ஸி.வி.யின் கவிதைகள், ஸி.வி.யின் கட்டுரைகள், நாட்டுப்பாடல்கள், ஸி.வி.யின் நாவல்கள், சில பிரயத்தனங்கள், மரணப் படுக்கையில் ஆகிய எட்டுத் தலைப்புகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக ஸி.வி. வேலுப்பிள்ளை வாழ்க்கைக் குறிப்பு, ஸி.வி. வேலுப்பிள்ளை எழுதிய நூல்கள் என்பன தரப்பட்டுள்ளன.