8904 ஈழப் போரின் இறுதி நாட்கள்.

வெற்றிச்செல்வி (இயற்பெயர்: வேலு சந்திரகலா). சென்னை 600078: தோழமை வெளியீடு, எண் 10, ஆறாவது தெரு, முதல் செக்டர், கே.கே.நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை).

120 பக்கம், விலை: இந்திய ரூபா 75., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-80369-38-9.

மன்னார் மாவட்டத்தில் அடம்பன் கிராமத்தில் 1974இல் பிறந்த வெற்றிச்செல்வி 1991இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து இறுதியுத்தம் வரை போராளியாகச் செயற்பட்டவர். 1993இல் வெடிவிபத்தொன்றில் ஒற்றைக் கண்ணையும், ஒற்றைக் கையையும் இழந்தவர். 1997 முதல் எழுத்துத் துறையில் பிரவேசித்த இவர் 1999-2004 காலப்பகுதியில் புலிகளின்குரல் வானொலியில் அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் செயற்பட்டவர். பெண் புலிகளின் சுதந்திரப்பறவைகள் பத்திரிகையிலும் பணியாற்றியவர். இவரது “இப்படிக்கு அக்கா” என்ற கவிதைத் தொகுதி கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது. தடுப்புமுகாம் வாழ்வின்போது  எழுதப்பட்ட உயிரே உயிரே நாவல் தமிழகத்தின் தினமணி பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. இறுதி நாட்களும் எனது பயணமும் என்ற யுத்தகாலப் பயணக்கட்டுரை இணையங்களில் வெளியாகியிருந்தது. தற்போது மாற்றாற்றல் உடையவர்களுக்காக செயலாற்றத்  தொடங்கியிருக்கும் மன்னார் மாவட்ட தொண்டு நிறுவன அமைப்பொன்றில் பகுதிநேர கள உத்தியொகத்தராகச் செயற்பட்டு வரும் இவர் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளையும், தொடர்ந்து தடுப்பு முகாம் காலகட்டத்து வாழ்க்கையையும் இந்நூலில் பதிவுசெய்திருக்கிறார். முள்ளிவாய்க்கால் யுத்தத்தின்இறுதி நாட்கள் பற்றி யுத்தத்தின் இறுதித் தருணம் வரை களத்தில் போராளியாக நின்று எழுதும் இந்த நூல் ஈழ இறுதிப்போரின் சாட்சியமாக முக்கியம் பெறுகின்றது. எந்தப் புனைவுகளுமின்றி இறுதிப் போரையும் அந்தப் போரின் துயரத்தையும் அங்கு நடந்தவைகளையும் எழுதியிருக்கிறார் வெற்றிச்செல்வி.

ஏனைய பதிவுகள்