8905 ஈழம் போர் நிலம்.

தீபச்செல்வன் (இயற்பெயர்: பாலேந்திரன் பிரதீபன்). சென்னை 600078: தோழமை வெளியீடு, எண் 10, ஆறாவது தெரு, முதல் செக்டர், கே.கே.நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை).

168 பக்கம், விலை: இந்திய ரூபா 110., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-80369-34-1.

கிளிநொச்சி மாவட்டத்தில் இரத்தினபுரத்தில் 1983இல் பிறந்தவர் தீபச்செல்வன். கவிதைகளுடன் கட்டுரைகளையும் கதைகளையும் எழுதிவரும் இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புப் பட்டப்படிப்பை பூர்த்திசெய்தவர். புகைப்படம் மற்றும் வீடியோ விவரணம், விமர்சனம், ஊடகவியல் முதலிய துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியப் பொதுச்செயலாளராகவும் இயங்கிய இவர்அதே பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் வருகைதரு விரிவுரையாளராகவும் இதழியல் பயிற்றுவிப்பு ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். சுயாதீன ஊடகவியலாளராகச் செயற்பட்டுவரும் தீபச்செல்வன் ஈழ அரசியலில் சமகால வாழ்வின் நிலவரங்களைத் தொடர்ந்து எழுதிவருபவர். ஈழத்தின் நான்காம் கட்டப் போர் பற்றிய உணர்வுபூர்வமான கட்டுரைகளை இந்நூலில் தொகுத்திருக்கிறார். குளோபல் தமிழ்ச் செய்திகள், தினக்குரல், காலச்சுவடு, உயிர்மை, இருக்கிறம், கீற்று, ஈழம் நியுஸ், முதற்குரல் ஆகிய ஊடகங்களில் இவை முன்னர் வெளியாகியுள்ளன. ஈழத்தவரின் நிலம்சார்ந்த பிரச்சினைகளை எழுதியமைக்காக 2010ம் ஆண்டின் நெருக்கடிச் சூழலில் செய்தி தேடலுக்கான சிறந்த ஊடகவியலாளர் விருதினையும், 2010ம் ஆண்டின்சிறந்த புகைப்பட ஊடகவியலாளர் விருதினையும் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏனைய பதிவுகள்