எஸ்.எம்.கோபாலரத்தினம். சென்னை 600 078: தோழமை வெளியீடு, 5D, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், 1வது பதிப்பு, டிசம்பர்; 2008. (சென்னை: அம்மன் பிரிண்டிங் வேர்க்ஸ்).
344 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-907863-4-8.
பாரிசிலிருந்து வெளிவந்த-ஈழநாடு பத்திரிகையில் ஈழத்தின் பிரபல ஊடகவியலாளரான ஆசிரியர் எழுதிய தொடரின் ஒரு பகுதி முடிவில்லாப் பயணத்தில் என்ற தலைப்பில் சிறு பிரசுரமாக வெளிவந்திருந்தது. அந்நூலின் விரிவான பதிப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. அலைகடல் பயணம், கரை தெரியவில்லை, முடிவில்லாப் பயணம், துக்கதினம், ஓரின ஆட்சி-இது சிங்கள ஜனநாயகம், தனிச் சிங்கள அமைச்சரவை, அரசியல் யாப்பு, சிங்களக் குடியேற்றம், சிங்களம் மட்டுமே, அமைதிவழிப் போராட்டம், பண்டா-செல்வா ஒப்பந்தம், சரணடைந்தார் பண்டாரநாயக்க, கடவுளே வருவார் காடுகளே சுடும், ஓநாய்கள் மீண்டும் உறுமின, ஓரினத்தின் பிரதமர்-ஒரு தேசத்தின் பிரதமர் அல்ல, வஞ்சக வலை, நெடும்பயணம் போன நீதி, சிங்களம் சிங்களம் சிங்களம் மட்டுமே, ஈழநாடு, மறுபடியும் காந்தி மகாத்மா, ஆதிக்க நரித்தனம் ஆண் என்ன பெண் என்ன, குனிவதா நிமிர்வதா, புதுடில்லி வஞ்சகம், நட்டாற்றில் மூழ்கும் படகுகள், அடிமைகள் ஓய்வதில்லை, மீண்டும் வென்றார் சிறிமாவோ, இனப்பாகுபாடு-இனவெறி -இனஒழிப்பு, வங்கதேசம் போல், உலகத் தமிழர் மாநாடு, தமிழருக்குத் தனிஅரசு, ஆயுதம் செய்வோம், தனி ஈழப் பிரகடனம் ஆகிய தலைப்புகளினூடாக இலங்கையின் இனப்பிரச்சினையின் அரசியல் வரலாறு பேசப்படுகின்றது. பின்னிணைப்பாக புதினம் இணையத் தளத்தில் பிரசுரமான அனிதா பிரதாப் அவர்களுக்கு வழங்கிய நேர்காணலும் இணைக்கப்பட்டுள்ளது.