8930 இருபதாம் நூற்றாண்டு சிவதலம் ஆவரங்கால் வரலாறு.

கதிர் பாலசுந்தரம் (தொகுப்பாசிரியர்). கனடா: கதிர் பாலசுந்தரம், 19, Summerlea Street, Markham, Ontario, L3S 4H6, 1வது பதிப்பு, மே 2010. (தமிழ்நாடு: சில்வியா லேசர்ஸ், திருச்சி).

xxx, 523 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ., ISBN: 0-9781836-03.

லண்டன் ஆவரங்கால்  ஒன்றியத்தின் பதிப்புரிமையுடன், கே.சின்னத்துரை ஜே.பி. அவர்கள் வெளியிட்டுள்ள பிரதேச வரலாற்று நூல் இது. நான்கு பிரிவுகளைக்கொண்ட இந்நூலின் முதலிரண்டு பிரிவுகளும் தமிழ்மொழியில் பதிவாகின்றன. மூன்றாம் நான்காம் பிரிவுகள் ஆங்கில மொழியில் பதிவாகின்றன. புவியியல் அமைவு, சமய, பொருளியல், அரசியல், கலை, கலாச்சார, பண்பாட்டு அடையாளங்கள் முதற்பிரிவில் சொல்லப்படுகின்றன. மூதாதையரின் பௌதிகச் சூழலையும், வாழ்வியலையும் படைப்பிலக்கியங்களின் வாயிலாக இரண்டாம் பிரிவு பேசுகின்றது.  முன்னுரை, முகவுரை, அறிமுகம் என்பவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பும் 35-49ம் அத்தியாயங்களும் ஆங்கில மொழியில்  மூன்றாம் நான்காம் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன. வே.இளையகுட்டி, சி.கிருஷ்ணபிள்ளை, ந.மயில்வாகனம், கா.சிவசோதி, வெ.கணபதிப்பிள்ளை, க.திரவியம், அ.க.த.கிருஷ்ணராசா, க.சின்னத்துரை, சி.சிவசுப்பிரமணியம்,  சின்னத்துரை ஸ்ரீவாஸ் ஆகியோர்  இத்தொகுப்பிற்கான ஆக்கங்களை எழுதியுள்ளனர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  229010).

ஏனைய பதிவுகள்

$10 no deposit extra by Deuce Pub

Articles Deposit 5 get 80 free casino – Discuss Creative Dragon Fire Slot from the CryptoSlots Featuring Mega Matr… Wynn Vegas There are only the

12435 – வித்தியோதயம்: 1975-1976.

பொ.இரத்தினசிங்கம், நி.சரவணபவான் (இணை இதழாசிரியர்கள்). நுகேகொடை: தமிழ் மன்றம், வித்தியோதய வளாகம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1976. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி). xix, 214 பக்கம்,

14698 தமிழினி (சிறுகதைத் தொகுதி).

சமரபாகு சீனா உதயகுமார். வல்வெட்டித்துறை: குபேந்திரா பதிப்பகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மாருதி பிரின்டர்ஸ், 555 நாவலர் வீதி). vi, 155 பக்கம், விலை: ரூபா 280., அளவு: 19.5×14.5