8938 கிளிநொச்சி: போர் நகரத்தின் கதை.

தீபச்செல்வன் (இயற்பெயர்: பாலேந்திரன் பிரதீபன்). United Kingdom: எழுநா ஊடக நிறுவனம், 4, Kettering Road, Isham, Kettering, NN14 1HQ,    1வது பதிப்பு, ஜனவரி 2013. (சென்னை 6000005: எஸ்.வி.பிரின்ட்ஸ்).

99 பக்கம், விலை:  இந்திய ரூபா 50., அளவு: 21.5×14 சமீ. ISBN: 978-81-908076-4-7.

கொடும் அழிவுகளை விதைத்த வன்னி யுத்தத்தின் பின்னர் தனது சொந்த நகரத்தின் மனிதர்களைத் தேடி அலைந்த தீபச்செல்வன், போரின் கொடிய நாட்கள் விழுங்கிச் செரித்த அந்த அப்பாவி மக்களின் கதைகளைஅருகிலிருந்து இரத்தமும் சதையுமாகக் கேட்டறிந்து  இந்நூலில் பதிவுசெய்திருக்கிறார்.  கிளிநொச்சியில் தான் சந்தித்த மனிதர்களையும், சம்பவங்களையும் குளோபல் தமிழ் செய்திகள் இணையத்தில்  முன்னதாகத் தொடராகப் பதிவுசெய்திருந்தார். அப்பதிவின் நூலுருவே இதுவாகும். இவை புனைவு எழுத்துக்கள் அல்ல. கிளிநொச்சி மக்கள்எவ்வாறான வாழ்விலிருந்து மீண்டு வந்தார்கள் என்பதை நாளைய உலகத்திற்கு வரலாறாக்கி வைத்துள்ள பெருமை இந்நூலுக்குரியது. கிளிநொச்சி, அப்பண்ணாவின் ஊன்றுகோல், சுதா கடை, யுத்த நகரின் நண்பர்கள், பிள்ளைகளைக் காணாதிருக்கும் அம்மாக்கள், பொய்க்கால்கள், மாபிள் கண்கள், பொம்மை வீடுகள், மிதிவெடிக் கிழங்குகள், அம்மா இல்லாத வீடு, பாம்புகள் அலையும் கூடாரம் ஆகிய 11 தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. நூலின் மேலட்டை கிளிநொச்சி: போர் தின்ற நகரம் என்று குறிப்பிடுகின்றது.

ஏனைய பதிவுகள்