பாலசுகுமார் (தொகுப்பும் அமைப்பும்). மட்டக்களப்பு: அனாமிக்கா பதிப்பகம், 48, பெய்லி 1வது குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, ஜுன் 2013. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு).
96 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ.
ஒரு மரபுவழிச் சமூகத்தின் வரலாறு, கலை, பண்பாட்டுக் கூறுகள் என்பவற்றைத் தாங்கி இந்நூல் வெளிவந்துள்ளது. தம்பலகாமம், தம்பன் கோட்டை வரலாறு சுவாரஸ்யமானது, கந்தளாய், கண்தழையே கந்தளாய் ஆனது, அழகு பூக்கும் ஆலங்கேணி, தம்பலகாமத்துப் பொங்கல், வீரக்கோன் முதலியார் (தம்பலகாமம் க.வேலாயுதம்), வாழ்வியல் ஆவணம் தம்பலகாமம், அகவை 75 கண்ட தாமரைத்தீவான் (எஸ்.ஆர்.தனபாலசிங்கம்), க.வேலாயுதம் (கேணிப்பித்தன்), தம்பலகாமத்தின் கலை வரலாறு (க.வேலாயுதம்), தம்பலகாமத்தின் இசை வரலாறு (பால சந்திரகுமார்), சங்கீதபூஷணம் வல்லிபுரம் சோமசுந்தரம், கலாபூஷணம், கலைமணி, கந்தர்வகான இசைமணி திரு. க.சண்முகலிங்கம், பல்துறைக் கலைஞர் வெ.மகாலிங்கம், காளியப்ப முருகுப்பிள்ளை அண்ணாவியார் (த.வேலாயுதம்), கலாபூஷணம் லயஞானமணி கோ.சண்முகராசா, கறிவேப்பிலை (கேணிப்பித்தன்), ரங்கநாயகியின் காதலன் (குறுநாவல் பகுதி 2), தொடரும் (யதீந்திரா), வீடு- ஞாபகச் சிதறல் (த.ஜீவராஜ்), அழுகின்றேன் (அ.கௌரிதாசன்) ஆகிய 22 தலைப்புகளில் தம்பலகாமம் தொடர்பான பல்வகைப் படைப்புகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.