8947 மட்டக்களப்பு வரலாறு: பூர்வீக குடிகளும் குமாரதெய்வ வழிபாடும்: பண்பாட்டு வரலாற்றினடியாக ஒரு உசாவல்.

எ.விஜயரெட்ண. United Kingdom: எழுநா ஊடக நிறுவனம், 4, Kettering Road, Isham, Kettering, NN14 1HQ, 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (சென்னை 6000005: சுவடி).

78 பக்கம், விலை:  இந்திய ரூபா 50., அளவு: 21.5×14 சமீ. ISBN: 978-93-80244-97-6.

மட்டக்களப்புப் பிரதேசம் (அறிமுகம்), மட்டக்களப்பு வரலாறு (வரலாற்று மூலங்களும் வரலாற்றின் பருமட்டான வரைபும், மட்டக்களப்பின் பூர்வீகக் குடிகள், மட்டக்களப்பில் நிகழ்ந்த குடியேற்றங்கள்), மட்டக்களப்பின் பூர்வீக குடிகள் (அறிமுகம்), பூர்வீகக் குடிகளின் குமாரதெய்வ வழிபாடு, இலங்கை வரலாற்று ஆவணங்கள் தரும் தகவல்கள் (இலங்கையின் தொல்லியல் சான்றுகள் தரும் தகவல்கள், இலங்கையின் வரலாற்று நூல்கள் தரும் தகவல்கள், நான்கு புத்தர்களின் வருகை, பகவான் புத்தரின் வருகை, விஜயன் காலம், பாண்டு அபயன் காலம், துஷ்டகாமினி காலம், பொலன்னறுவைக்காலம்), ஆகிய ஐந்து அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இனியொரு  என்ற இணையத்தளத்தில் தொடராக முன்னர் எழுதப்பட்ட கட்டுரையின் நூல்வடிவம் இதுவாகும். எ.விஜயரெட்ண (விஜய்) மட்டக்களப்பு, கிரான் என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். மலையகத்தில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். மட்டக்களப்பின் பூர்வீக வரலாறும், பூர்வீக வழிபாட்டு முறைகளுள் ஒன்றான குமார தெய்வ வழிபாடும் இந்நூலில் சிறப்பாக ஆய்வுசெய்யப்படுகின்றன. பண்பாடு சார்ந்த அம்சங்களைக் கொண்ட வரலாற்றெழுத்தியல் முறைமை என்ற போதும், இந்நூலின் பெரும்பாலான தர்க்கங்களும் தகவல்மூலங்களும் கடந்தகால ஆவணங்களில் இரந்தும் அனுபவம் மற்றும் கள அய்வு சார்ந்தும் எடுத்தாளப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

30 Euro Casino Bonus Ohne Einzahlung

Content Häufig Gestellte Fragen Zum Bonus Ohne Einzahlung – novoline book of ra trick 90 mehr freispiele Beste Online Casinos Mit 5 Euro Mindesteinzahlung Wie