நிதின் ஏ கோகலே. சென்னை 6000018: கிழக்கு பதிப்பகம், இல. 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்ப்பேட்டை, 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (சென்னை: நியு ஹொரைசன் மீடியா).
208 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-8493-348-2.
இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான இறுதி யுத்தம் நடைபெற்ற தருணங்களில் நேரில் பார்த்து பலரைப் பேட்டி கண்டு பக்கச்சார்பில்லாத தொனியில் இந்நூலை உருவாக்கியருக்கிறார். இலங்கை ராணுவத்தின் போர்த் திட்டங்களை விளக்கமாக விபரிக்கும் ஒரு நூல். ஆங்கிலத்தில் Sri Lanka: From War to Peaceஎன்ற தலைப்பில் வெளியான நூலின் தமிழாக்கம்.1999 இல் நடந்த இந்திய பாக்கிஸ்தான் கார்கில் போர், இலங்கையில் 33 மாதங்கள் நடந்த நான்காம் ஈழப்போர் ஆகியவற்றை நேரில் பார்த்து தொலைக்காட்சிக்காக செய்திகளை அனுப்பிய இந்தியப் பத்திரிகையாளர் நிதின் ஏ கோகலே. என்.டி.டீ.வீ சானலின் NDTV பாதுகாப்பு மற்றும் ராணுவ விஷயங்கள் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.