யாழினி முனுசாமி. சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/9 ஆர்க்காடு சாலை, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/9 ஆர்க்காடு சாலை, கோடம்பாக்கம்).
112 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 21.5×13.5 சமீ., ISBN: 81-89748-44-0.
தமிழகத்தைச் சேர்ந்த திரு யாழினி முனுசாமி நவீன இலக்கியம் சார்ந்து இயங்குபவர். இவரது விமர்சனங்கள் சிறுபத்திரிகைச் சூழலில் பரவலான வரவேற்பைப் பெற்றவை. புதிய பார்வை, புத்தகம் பேசுது, உங்கள் நூலகம், கல்வெட்டு பேசுகிறது, தாமரை முதலான பல இதழ்களில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை நூல்கள், புலம்பெயர் படைப்புகள் குறித்த இவரது விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. அவ்விமர்சனங்களின் தேர்ந்த தொகுப்பாக இந்நூல் வெளிவருகின்றது. ஆய்வரங்குகளில் சமர்ப்பித்த சில ஆய்வுகளும் இடம்பெற்றுள்ளன. புலம்பெயர்ந்தோர் கவிதைகளிலே பிரிவுத் துயரமும் மீளும் நம்பிக்கையும் இத்தொகுப்பில் காணப்படும் குறிப்பிடத்தக்கதொரு கட்டுரையாகும்.; ஈழத் தமிழ்ப்படைப்புகள் பற்றிய குறிப்புகள் இவரது கட்டுரைகளில் பரவலாகக் காணப்படுகின்றன.