புகழேந்தி (மூலம்), கு.பூபதி (பதிப்பாசிரியர்). சென்னை 600078: தோழமை வெளியீடு, 5D, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், 1வது பதிப்பு, பெப்ரவரி 2010. (சென்னை: அம்மன் பிரிண்டிங் வேர்க்ஸ்).
(8), 216 பக்கம், வண்ணத் தகடுகள்;, விலை: இந்திய ரூபா 100., அளவு: 21×14 சமீ.
புகழேந்தியின் முதல் தனிநபர் ஓவியக்கண்காட்சி 1988இல் தஞ்சை பெசன்ட் அரங்கத்தில் நடைபெற்றது. ஓவியக் கல்லூரியில் வரைந்த ஓவியங்களுடன் ஈழத்து இனப்படுகொலை தொடர்பான ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. பெருவரவேற்பைப் பெற்ற அக்கண்காட்சி பின்னர் பல இடங்களிலும் எரியும் வண்ணங்கள், உறங்கா நிறங்கள், சிதைந்த கூடு, திசை முகம், புகைமூட்டம், புயலின் நிறங்கள், உயிர்ப்பு போன்ற பெயர்களில் ஓவியக் கண்காட்சிகள் தொடர்ந்தன. காட்சி நடைபெறும் இடங்களில் மக்கள் கருத்துப் பதிவக்காக வைக்கப்பட்ட கருத்துப் பதிவேட்டுப் புத்தகத்தலிருந்து தேர்ந்தெடுத்த கருத்துக்களின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. நடைபெற்ற கண்காட்சி, இடம், திகதி போன்ற விபரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.