அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி. யாழ்ப்பாணம்: நூலக விழிப்புணர்வு நிறுவகம், 1வது பதிப்பு, 2005. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி பதிப்பகம்).
xix, 158 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 28.5×21 சமீ., ISBN: 955-1383-00-0
இரு பகுதிகளாக எழுதப்பட்டுள்ள இந்நூலில் அறிமுகம், அறிவுப் பிரபஞ்சம், பொருட்துறைகளின் உருவாக்கம், பகுப்பாக்கப்பணி, தூவி தசாம்சப் பகுப்புத் திட்டம், புதிய மாற்றங்கள், பொருட்துறைகளை விளங்கிக்கொள்ளல், தூவி தசாம்சப் பகுப்புத் திட்டமும் எண் கட்டுமானமும், துணை அட்டவணைகளும் எண் கட்டுமானமும், சிறப்பு இணைப்பெண்களும் எண் கட்டுமானமும் ஆகிய அத்தியாயங்கள் முதலாவது பகுதியிலும், தூயி தசாம்சப் பகுப்புத் திட்டம், பிரதான அட்டவணை (பொருள் வகுப்புப்பிரிவு), Relative Index ஆகியன இரண்டாவது பகுதியிலும் இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விசார் நூலகராகப் பணியாற்றுகிறார்.