வே.யுகபாலசிங்கம். யாழ்ப்பாணம்: பட்டப்படிப்புகள் கல்லூரி, 148/1, ஸ்ரான்லி வீதி, 1வது பதிப்பு, மே 1989. (யாழ்ப்பாணம்: பஸ்தியான் அச்சகம்).
(6), 90 பக்கம், விலை: ரூபா 35., அளவு: 21×14 சமீ.
மெய்யியல்துறையின் மாணவர்களுக்கு அத்துறையை அறிமுகம்செய்வதில் இந்நூல் பயனுள்ளதாக அமைகின்றது. விஞ்ஞானம், விஞ்ஞானத்தில் உய்த்தறிமுறையும் தொகுத்தறிமுறையும், தொகுத்தறித் தாவுதலும் இயற்கையின் ஆதாரவிதிகளும், விஞ்ஞானமும் கருதுகோள் ஆக்கமும், விஞ்ஞானத்தில் அவதானமுறை, விஞ்ஞானக் கருதுகோள் ஆக்கத்தில் சான்று, விஞ்ஞானத்தில் ஒப்புமை முறை, புள்ளிவிபரமுறையும் விஞ்ஞான விளக்கமும், சமூக விஞ்ஞானமும் புள்ளிவிபரமும், சமூக விஞ்ஞானமும் அவ்விஞ்ஞானமுறை பற்றிய மதிப்பீடும் ஆகிய பத்து இயல்களுடன், அவ்வியல்களுக்கான பயிற்சி வினாக்களையும் உள்ளடக்கியது. நூலாசிரியர் நீண்டகாலமாக யாழ்ப்பாணத்தில் அளவையியலும் விஞ்ஞானமுறையும் போதிப்பதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 100354).
விஞ்ஞானமும் விஞ்ஞான முறையும்: ஓர் அறிமுகம்.
வே.யுகபாலசிங்கம். யாழ்ப்பாணம்: பட்டப்படிப்புகள் கல்லூரி, 57ஃ13 ஸ்ரான்லி வீதி, இணை வெளியீடு: மெய்யியற் கல்வி அகம், 46ஃ2, கொழும்புத்துறை வீதி, சுண்டிக்குளி, யாழ்ப்பாணம், 1வது பதிப்பு, 2000. (யாழ்ப்பாணம்: முல்லை அச்சகம், ஆடியபாதம் வீதி, நல்லூர்).
xii, 122 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14 சமீ.
விஞ்ஞானமும் விஞ்ஞான முறையும்: ஓர் அறிமுகம்.
வே.யுகபாலசிங்கம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2023, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xii, 124 பக்கம், விலை: ரூபா 950., அளவு: 22×15 சமீ., ISBN: 978-624-6164-39-3.
விஞ்ஞானம், பண்டைய நாகரீகங்களும் விஞ்ஞான அறிவும், விஞ்ஞான அறிவு-வரைவிலக்கணம், விஞ்ஞானத்தில் உய்த்தறி-தொகுத்தறி முறைகளும் அவற்றின் பயன்பாடுகளும், தொகுத்தறித் தாவுதலும் இயற்கையின் ஆதாரவிதிகளும், விஞ்ஞானமும் கருதுகோள் ஆக்கமும், விஞ்ஞானத்தில் அவதானமுறையும் அவற்றின் பயன்பாடுகளும், விஞ்ஞான விளக்கத்தில் சான்று என்னும் முறை, விஞ்ஞானத்தில் ஒப்புமை முறை, விஞ்ஞானத்தில் புள்ளிவிபரமுறை, சமூக விஞ்ஞானத்தில் புள்ளிவிபர முறையும் அதன் பிரயோகமும், திருப்திகரமான விஞ்ஞான விளக்கம் நோக்கி ஆகிய பன்னிரு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலின் முன்னைய பதிப்பு 1989இல் வெளிவந்திருந்தது. அதன் திருத்திய விரிவான பதிப்பாக இது அமைகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 136017).