7079 சித்தாந்த சைவ நெறித் திறவுகோல்.

ச.தியாகராசா. யாழ்ப்பாணம்: ச.தியாகராசா, சரசாலை, 1வது பதிப்பு, 1971. (கொழும்பு 2: அருளொளி அச்சகம், 31/21 டோசன் வீதி).

viii, (2), 108 பக்கம், விலை: ரூபா 1.75, அளவு: 19.5×13 சமீ.

இந்திய தத்துவங்களின் சிறப்பினை ஒருங்கே கொண்டது தென்னாட்டில் எழுந்த சைவசித்தாந்த தத்துவம் என்பர். 12ம் நூற்றாண்டில் எழுந்த மெய்கண்டதேவரின் சிவஞானபோதம் என்ற நூலே சைவசித்தாந்த முதனூலாகும். யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகளின் நற்சிந்தனை என்ற ஞானநூற் களஞ்சியமும் சைவசித்தாந்தத்தின் விளக்கமாகக் கருதப்படுகின்றது. யோகசுவாமிகளின்  மெய்யன்பருள் ஒருவரான இந்நூலாசிரியர் சிவஞானசித்தியார், தேவாரத் திருமுறைகள் காட்டி நற்சிந்தனையின் போதனை சைவசித்தாந்தமே என்பதை அழுத்தமாக எடுத்துரைக்கிறார். பொது அதிகாரம், உண்மையதிகாரம் ஆகிய இரு பிரிவுகளாக உருவாக்கப்பட்டுள்ள இந்நூலின் பொது அதிகாரத்தின்கீழ்  பிராமண இயல், இலக்கண இயல் ஆகிய இரு பகுதிகளும், உண்மையதிகாரத்தின்கீழ் சாதனை இயல், பயனியல் ஆகிய பகுதிகளும் அடங்கியுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 64117).

ஏனைய பதிவுகள்

10181 இஸ்லாம் காட்டும் மனித சகவாழ்வு.

M.T.M. ஸாஹிர். மாவனல்லை: ஸாஹிர் பதிப்பகம், 1வது பதிப்பு, மார்ச் 2014. (மாவனல்லை: யுனிக் ஓப்ஸெட் பிரின்டர்ஸ்). vii, 85 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-0260-10-2. மனித