7098 வானசேகர சோடச பாவனா சோதிடம் என்னும் இலகுசாதகம்.

ச.அம்பலவாணபிள்ளை, இடைக்காடர். யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம், 1வது பதிப்பு, 1929. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்).

(12), 80 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 20×12.5 சமீ.

பல்வேறு முக்கிய சோதிட சாத்திர நூல்களைக் கற்று அவற்றின் முக்கிய பகுதிகளைச் சேர்த்து இந்நூல் செய்யுள் உருவில் ஆக்கப்பட்டுள்ளது. இலகுவில் பொருள் விளங்கும்வகையில் செய்யுள்களுக்கு உரையும், அரும்பதவிளக்கமும் தரப்பட்டுள்ளன. சென்னமான வருஷ, மாத,தேதி, வார, இலக்கின பலன்கள், திசை-புத்தி சித்திரங்கள், கால நிர்ணயம், கிரக நோக்கு, திசா பலன்கள், திசை விளக்கம் ஆகியவை உள்ளிட்ட 83 தலைப்புக்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 43803).

ஏனைய பதிவுகள்