சி.அப்புத்துரை (தொகுப்பாசிரியர்). கொழும்பு 13: திருமதி வெ.சுதர்சனா, 77 சங்கமித்தை மாவத்தை, 1வது பதிப்பு, மார்ச் 2005. (கொழும்பு: கீதா பதிப்பகம்).
120 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×13 சமீ.
யாழ்ப்பாணம் அச்செழு அமரர் கந்தையா வெற்றிவேலு (27.8.1962-27.10.1991) அவர்களின் நினைவாக இந்நூல் வெளிவந்துள்ளது. ஐந்து பகுதிகளைக்கொண்ட இந்நூலின் முதற் பகுதி முன்னுரை, பதிப்புரை, ஆசியுரைகளைக் கொண்டது. தெய்வீக விளக்கம் என்ற 2வது பகுதியில் பன்னிரு திருமுறைத் தொகுப்பு, சிவபுராணம், போற்றித் திருவகவல், திருவெம்பாவை, திருப்பொற்சுண்ணம், விநாயகர் அகவல், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, அபிராமிப் பதிகம், சகலகலாவல்லி மாலை, சமய நம்பிக்கையும் கொள்கைத் தொகுப்பும் ஆகிய அம்சங்கள் அடங்குகின்றன. 3வது பகுதியில் செல்வச்சந்நிதி முருகன் என்ற தலைப்பில் கா.சிவத்தம்பி, பாலநிர்மலன் பாலபிரதீபன், ஆகியோரின் இரு கட்டுரைகளும் த.பொ.கார்த்திகேசு இயற்றிய ஒருபாவொருபஃது என்ற தலைப்பிலான பாடல்களும் இடம்பெற்றுள்ளன. 4வது பகுதியில் புத்தூர் கிழக்கு அருள்மிகு ஞான வயிரவர் ஆலய வரலாறு (கட்டுரை), வயிரவர் துதிப்பாடல்கள் ஆகியன இடம்பெற்றுள்ளன. இறுதியான 5வது பகுதியில் அமரர் வெற்றிவேலு பற்றிய நான்கு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.