7146 ஆன்மீகப் பகை தார்மீகமானதா?

எஸ். ஹூசைன் மௌலானா. கொழும்பு 03: மிலேனியம் கல்வி ஸ்தாபனம், 20/15B, பத்தாவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2009. (அச்சகவிபரம் தரப்படவில்லை).

88 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 14.5×10.5 சமீ.

ஆன்மீகம் என்றால் என்ன, சீர்திருத்தவாதிகள் என்போர் யார்? இறைவனின் திருப்பொருத்தத்தை எவ்வாறு அடையலாம் என்பன போன்ற வினாக்களை முன்வைத்து அவற்றுக்கு விடையளிப்பதாக இலகு தமிழில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களில் எழுதப்பட்டுள்ள இந்நூலின் முதற் பாகம் அல்ஹஸனியா மதுராப்புர அஹதியாவில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவமாகும். இரண்டாம் பாகம் ஷியாயிஸம்- அதன் கொள்கைகளும் உட்பிரிவுகளும் என்ற விடயம் தொடர்பான ஆசிரியரின் கண்ணோட்டமாகும்.

ஏனைய பதிவுகள்

15608 யாத்திரையிடை தரிசனங்கள்.

அவ்பர் முஸ்தபா. அக்கரைப்பற்று: பேஜஸ், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ், C.E.B. மின்சார நிலைய வீதி). xviii, 192 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 23×15