7154 நடைமுறைக்கேற்ற இஸ்லாம் பாகம் 2.

முஹம்மத் அக்ரம். கொழும்பு 9: ஹிஸ்புல் இஸ்லாம் ட்ரஸ்ட், இஸ்லாமிய புத்தக இல்லம், 77 தெமட்டகொட வீதி, மருதானை, 4வது பதிப்பு, ஜுன் 2006, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1999, 2வது பதிப்பு, ஓகஸ்ட் 2001, 3வது பதிப்பு, ஜுன் 2004 (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி).

x, 298 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×15 சமீ., ISBN: 955-8591-02-5.

பதினைந்து அத்தியாயங்கள் கொண்ட இத்தொகுப்பில்  முன்னைய இமாம்களின் கருத்துக்களை கைவிடாமல் நவீன அறிஞர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி நடைமுறையில் இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றும் வழிமுறைகள் பற்றி விளக்கப்படுகின்றது. ஆசிரியர் தான் கூறவந்த விடயங்களை அல்குர் ஆன், சுன்னா  ஆதாரங்களுக்கூடாக மட்டுமன்றி வரலாற்றுக்கூடாகவும் சமூகவியல்சார்ந்த முக்கியத்துவங்களுக்கூடாகவும் வலியுறுத்த முனைகின்றார். நூலாசிரியர் அக்ரம், ஜாமிஆ நளீமியாவில் கல்வி கற்றவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று ஆசிரியராகப் பணியாற்றுபவர். 2003இல் வெளிவந்த நடைமுறைக்கேற்ற இஸ்லாம் பாகம் 1 இற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 4146.  (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 603906).

ஏனைய பதிவுகள்

Slot 5 Lions Gold

Content Ming dynasty Slot Machine | Ready to play 5 Lions Gold for efetivo? Bonus Buy Acimade barulho aparelhamento Aquele adição concede conformidade dos arranhão