எஸ்.அன்ரனி நோர்பேட் (பதிப்பாசிரியர்), வை.நவரட்ணம், தை.தனராஜ் (தமிழாக்கம்). கொழும்பு 5: பொதுசன கல்வி நிகழ்ச்சித் திட்டம், மார்க்க நிறுவனம், தபால் பெட்டி எண் 601, 61, இசிப்பத்தான மாவத்தை, 1வது பதிப்பு, 1995. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
166+2 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
சனநாயகத்தின் இயல்பும் கருத்தும் பற்றித் தொடர்ச்சியான ஐந்து நூல்களை வெளியிடுவதற்கான மார்க்க நிறுவனத்தின் முயற்சியில் மூன்றாவதாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் இரண்டு பிரிவுகளாக எழுதப்பட்டுள்ளது. முதலாவது பகுதியில் ஏதென்ஸின் பெரிக்கிள்சும் சனநாயகத்தின் பிறப்பும் என்ற தலைப்பின்கீழ் வை.நவரட்ணம் அவர்கள் தமிழாக்கம் செய்த அறிமுகம், எண்ணத்தோற்றம், கதாநாயகன், பெரிக்கிள்சின் நிழல் ஆகிய விடயங்கள் இடம்பெறுகின்றன. வை.நவரட்ணம் மகரகம தேசிய கல்வி நிறுவனத்தின் தொலைக்கல்வித்துறையின் செயற்றிட்ட அதிகாரியாவார். சோதனைக் களத்தில் முதலாளித்துவ சனநாயகம் என்ற இரண்டாவது பகுதி தை.தனராஜ் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டது. இப்பகுதியில், தொக்வில்லும் மில்லும், லஸ்கியும் லாஸ்வெல்லும், சும்பீற்றரும் ஹயெக்கும், கால்பிறைய்த்தும் குறோஸ்லாந்தும் ஆகிய நான்கு தலைப்புகளின்கீழ் விடயங்கள் தரப்பட்டுள்ளன. தை.தனராஜ் மகரகம தேசிய கல்வி நிறுவனத்தின் கல்வி முகாமைத்துவ அபிவிருத்தித் துறையின் செயற்றிட்ட அதிகாரியாவார். (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 492554).