7195 ஜனநாயகத்திற்கான ஒரு வழிகாட்டி.

தோமஸ் மேயர் (பதிப்பாசிரியர்),  எஸ்.மஹாதேவன் (மொழிபெயர்ப்பாளர்), நோபர்ட் அந்தனி, ஜோசப் அருள்வாசகம், மாதவகலா மாதவன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 4: பிரட்றிச் ஈபர்ட் மன்றம், Friedrich Ebert Stiftung, இல.4, அடம்ஸ் ஒழுங்கை, 1வது பதிப்பு, 2008. (அச்சக விபரம் தரப்படவில்லை).

v, 54 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 14.5×11 சமீ., ISBN: 978-955-607-051-4.

FES (Friedrich Ebert Stiftung) வெளியீட்டுத் தொடரில்  75ஆவது பிரசுரமாக அமையும் இச்சிறு நூல் ஜனநாயகம் பற்றிய பல்வேறு அடிப்படைத் தகவல்களை அறிவூட்டும் நோக்கில் உள்ளடக்கியுள்ளது. ஜனநாயகம், மனித உரிமைகள், சட்ட விதிமுறைகள், அதிகாரப் பரவலாக்கல் முறை, பல்வகைத்தன்மை, உள்ளுர் சுயாட்சி, தேர்தல், அரசியல் கட்சிகள், சிவில் சமுதாயம், பொது அரங்கு, அரசியல் கலாச்சாரம், நல்லாட்சி, உலகமயமாக்கலும் பொருளாதாரமும், இருவகையிலான ஜனநாயகம், நல்லிணக்கமும் சமாதானமும் ஆகிய தலைப்புகளில் இவை சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

13024 கிராமிய பூபாளம் 2019: வரலாற்றைப் படித்து வரலாற்றைப் படைத்து வரலாறாகி நிற்கும் தொண்டர் திருவுக்கு அகவை 80இல் திருவுருவச் சிலை: சிறப்பு மலர்.

மலர்க்குழு. ஜேர்மனி: புங்குடுதீவு தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியம், என்னப்பெற்றால், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (மாவிட்டபுரம்: அக்ஷதா பதிப்பகம்).44 பக்கம்இ வண்ணப்படத் தகடுகள்இ விலை: அன்பளிப்புஇ அளவு: 24.5×17 சமீ. புங்குடுதீவு