7200 வரி விதிப்பு 1995/1996, 1996/1997, 1997/1998.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம். கொழும்பு: உள்நாட்டு இறைவரித் திணைக்களம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1997. (கொழும்பு அரசாங்க அச்சுத் திணைக்களம்).

vi, 146 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.

இச்சிறு நூலானது இலாபங்கள் மற்றும் வருமானம் என்பவற்றின் வரிவிதிப்புத் தொடர்பிலான 1979ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் (1996ஆம் ஆண்டின் 16அம் இலக்க திருத்தச் சட்டத்தினால் இறுதியாகத் திருத்தப்பட்டவாறாக) முக்கிய ஏற்பாடுகளைச் சுருக்கமாக விளக்குகின்றது.  மேலும் திணைக்களத்தின் பல்வேறு அலுவலகங்களுக்கிடையிலான பணிகளின் பகிர்வு, அலுவலகங்கள் அமைந்துள்ள இடங்கள், தொலைபேசி இலக்கங்கள் போன்ற பல பயனுள்ள தகவல்களையும் இது உள்ளடக்கியுள்ளது. வரிசெலுத்துவோருக்கு அவருடைய வரிப் பொறுப்புடைமை தொடர்பிலான சட்டங்களை அறியத்தருவதே இச்சிறு நூலின் நோக்கமாகும். (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 506477).

ஏனைய பதிவுகள்

15117 மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் சித்திரத் தேர் வெள்ளோட்ட சிறப்பு மலர்-1993.

மு.சிவஞானம், பெ.ஆறுமுகம், எஸ்.செல்வகுமார் (தொகுப்பாசிரியர்கள்), என்.அருளானந்தம் ( உதவி ஆசிரியர்). மாத்தளை: மலர் வெளியீட்டுக் குழு, அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், 1வது பதிப்பு, மார்ச் 1993. (மாத்தளை: Bravi Printers). (120) பக்கம்,