கேதீஸ் லோகநாதன் (ஒருங்கிணைப்பாளர்). கொழும்பு 7: மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், 32/3, பிளவர் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2000. (கொழும்பு 7: அச்சக விபரம் தரப்படவில்லை).
(4), 66 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 955-8037-26-5.
கொழும்பு- இலங்கை மன்ற நிறுவனத்தில் 13 வைகாசி 2000, 27 வைகாசி 2000 ஆகிய திகதிகளில் இரு பகுதிகளாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் கட்டமைப்புகள், நடைமுறைகள் பற்றிய கருத்தரங்குத் தொடர்களின் விளைவாக கண்டறிந்த சில படிப்பினைகள், சிந்தனை வெளிப்பாடுகள் என்பனவற்றின் தொகுப்பாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளிடம் ஆனையிறவு இராணுவத்தளம் வீழ்ச்சியுற்ற தருணத்தில் அரசாங்க அனுசரணையுடனான போரில் கால்வைப்பு நிலைமை தீவிரமாக்கப்பட்டு ஊடகத் தணிக்கை மேலும் தீவிரமாக்கப்பட்டிருந்த வேளையில் இக்கருத்தரங்கு நடைபெற்றிருந்தது. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 546460).