எஸ்.அன்ரனி நோர்பேட். கொழும்பு 6: இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், 18, 6/1 கொலிங்வுட் பிளேஸ், 1வது பதிப்பு, பெப்ரவரி 2011. (கொழும்பு 6: R.S.T.Enterprises, 114, W.A.Silva Mawathe).
59 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-1810-15-3.
சூசைப்பிள்ளை அன்ரனி நோர்பேட் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். இவர் புவியியல் கற்கையின் சமகாலச் செல்நெறிகளையும் மாற்றங்களையும் உடனுக்குடன் உள்வாங்கி கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளில் புதிய நுட்பங்களை விருத்தி செய்து வருபவர். பூகோளம் வெப்பமடைதல் என்ற இந்த நினைவுப் பேருரை தோழர் கம்யூனிஸ்ட் கார்த்திகேயன் அவர்களது 32ஆவது வருட நினைவுப் பேருரையாக 27.9.2010இல் நிகழ்த்தப்பட்டது. அறிமுகம், பச்சைவீட்டு வாயுக்களும் பூகோளம் வெப்பமடைதலும், பூகோளம் வெப்பமடைதலும் கடல்மட்ட மாற்றங்களும், பூகோளம் வெப்பமடைதலும் சுதேசிய மக்களும், பூகோளம் வெப்பமடைதலும் மனித உரிமைகளும், சர்வதேச மாநாடுகளும் எதிர்காலப் போக்குகளும் ஆகிய ஆறு தலைப்புகளில் இப்பேருரை விரிகின்றது.