மியூரியல் பெரேரா (மூலம்), A.G.N.H. பெரேரா, W.M.H.தசநாயக்க, வில்சன் திசாநாயக்க, R.P.A. ஜயசேகர, ந.வாகீசமூர்த்தி, ப.சபாரத்தினம் (பாடப் பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: The Pacific Press).
58 பக்கம், புகைப்படங்கள்;, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட இந்நூலில், சூழல் மாசடைதல் என்றால் என்ன, வளிமண்டலம் மாசடைதல், நீர் மாசடைதல், விவசாய இரசாயனப் பொருட்களின் தீய விளைவுகள், கைத்தொழிலாற் சூழல் மாசடைதல் ஆகிய தலைப்புகளில் விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன. சூழல் மாசடைதல் என்பது எதனைக் குறிக்கின்றது என்று ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டும், சூழல் எவ்வாறு மாசடைகிறது என்பதையும் அதைத் தவிர்ப்பதற்கான முறைகளையும் மாசடைதலைத் தவிர்க்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்நோக்கங்களைக் கருத்திற்கொண்டு இம்மொடியூல் எழுதப்பட்டுள்ளது.