நிர்மலாதேவி நல்லையா. கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3 ரம்யா பிளேஸ், 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 10: குமரன் அச்சகம், B3-G3 ரம்யா பிளேஸ்).
xii, 126 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-659-280-1.
கற்றல்-கற்பித்தல் தொடர்பான தேர்ச்சி மிக்கவர்களாக பெரும்பாலான ஆசிரியர்கள் உள்ளபோதும், அவர்களது செயற்பாடுகள் உடலாலும் உள்ளத்தாலும் சமூகச் சூழலாலும் பல்வகைமை கொண்ட மாணவர்களுக்குப் பொருத்தமானவையா என்னும் எழுவினாவின் பிரதிபலிப்பே இந்நூலாகும். கற்கும் பொருளைவிட கற்கும் மாணவர் பெறவேண்டிய முக்கியத்துவம், அவர்களது கற்கும் இயல்புகளை ஏற்று கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளல், அச்செயற்பாடுகளின் வினைதிறனை உறுதிப்படுத்துவதற்கான உத்திகள், கற்கும் மாணவரது முழுமையான விருத்தி, அவ்விருத்தியை பிரதான இலக்காகக் கொள்ள வேண்டிய வகுப்பறை முகாமைத்துவ, பாடசாலை முகாமைத்துவ நடைமுறைகள் முதலான பல அம்சங்களை உள்ளடக்கியதாக இந்நூல் அமைந்துள்ளது. இந்நூலாசிரியர் யாழ்ப்பாணம் தேசிய கல்விக் கல்லூரியில் உப பீடாதிபதி யாகப் (நிர்வாகமும் நிதியும்) பணிபுரிகின்றார்.