7220 இலங்கையில் ஆசிரியத் தொழில்.

வி.கந்தவனம். யாழ்ப்பாணம்: ஆசிரியர் கழகம் (The Teachers’ Guild), வயாவிளான் மத்திய மகாவித்தியாலயம், வயாவிளான், 1வது பதிப்பு, கார்த்திகை 1978. (சாவகச்சேரி: திருக்கணித அச்சகம், மட்டுவில்).

(16), 88 பக்கம், விலை: ரூபா 6.00, அளவு: 20.5×13.5 சமீ.

ஆசிரியர் கல்வி டிப்ளோமா பரீட்சைக்காக எழுதிய ஆய்வுக் கட்டுரையின் விரிவாக்கப்பட்ட பதிப்பு இதுவாகும்.  இலங்கையில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலம்வரை ஆசிரியத்தொழில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும், தற்போது எவ்விதம் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதையும் மிக நுணுக்கமாக இந்நூலில் எடுத்தாண்டிருக்கிறார். தொழில் வரலாறு, தொழிலிற் சேர்க்கப்படும் முறை, ஆசிரியர்கள் புரியும் கடமைகள், ஆசிரியர்களுக்குத் தேவையான கற்பித்தற் சாதன வசதிகள், ஆசிரியத் தொழிலிலுள்ளோர் எண்ணிக்கை, சம்பளத் திட்டங்கள், முன்னேறுவதற்கான சந்தர்ப்பங்கள், பதவி விலகல், விடுமுறை வசதிகள், சமூகத்துடன் ஆசிரியத் தொழில் கொண்டுள்ள தொடர்பு, ஆசிரியர்களும் அரசியல் உரிமைகளும் ஆகிய 11 தலைப்புகளில் முதலாவது பகுதி அமைகின்றது. இரண்டாவது பகுதியில் ஆசிரியத் தொழிலுடன் தொடர்பான சில பிரச்சினைகள் என்ற தலைப்பின்கீழ் கற்பித்தல் நிலை, நிர்வாக நிலை, அரசியல் நிலை, சமூக நிலை, பொருளாதார நிலை, உளப்பாங்கு நிலை ஆகிய ஆறு அம்சங்களின்கீழ்; ஆசிரியத் தொழிலில் ஏற்படுகின்ற கஷ்டங்களை மிக விரிவாகத் தருகின்றார். சிறந்த ஆசிரியராக அமைவதற்கு வேண்டிய அறிவுரைகளை சமூகநிலை என்ற பிரிவில் வழங்கியிருக்கிறார்.  (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 102485).

ஏனைய பதிவுகள்

15870 க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்குரிய பௌதிகப் புவியியல் வினா-விடை.

 க.குணராசா. யாழ்ப்பாணம்: அன்பு வெளியீடு, 550/7, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1968. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி). 60 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 2.00,

Egyszerű tippek a Winnings Keno-hoz

Blogok Az összes sportesemény Eljárások, amelyek segítenek Önnek abban, hogyan nyerhet a fogadáskor, és jobb életmódot érhet el Globe bögre fogadási stílus Mi a játékok