7224 கற்பித்தல்.

ஜெரே ப்ரோஃபி (ஆங்கில மூலம்), புஷ்பா சிவகுமாரன் (தமிழாக்கம்), சோ.சந்திரசேகரம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி, 1வது பதிப்பு, 2007. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி).

71 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 19.5×12.5 சமீ., ISBN: 978-955-659-085-4.

பயனுறுதிவாய்ந்த கற்பித்தலின் இனத்திற்குரிய அம்சங்கள் பற்றிய இக்கைந்நூல், சர்வதேசக் கல்வி மன்றத்தினால் அபிவிருத்தி செய்யப்பட்டு சர்வதேசக் கல்விப் பணியகத்தினாலும் மன்றத்தினாலும் விநியோகிக்கப்படும் கல்விசார் செயற்பாடுகள் பற்றிய நூற்றொடரில் உட்படுத்தப்படுவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ளது. கல்வியின் சகல பரப்புகளிலும், புலமைசார்ந்த முதன்மை நிலையை வளர்த்தல், சர்வதேசக் கல்வி மன்றத்தின் ஒரு நோக்கமாகும். இந்நோக்கத்தின் ஒரு பகுதியாக, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கல்விசார் விடயங்கள் பற்றிய ஆராய்ச்சியின் சமயோசிதமான தொகுப்புகளை மன்றம் வழங்குகின்றது. பொதுவாகக் கற்றலை மேம்படுத்தும் கல்விசார் செயற்பாடுகள் பற்றிய நூற்றொடரில் இது முதலாவது கைந்நூலாகும். இது கல்வியின் மிக மையச் செயற்பாடாகிய கற்பித்தலில் கவனஞ் செலுத்துகின்றது. ஆதரவை வழங்கும் வகுப்பறைச் சூழல், கற்பதற்குச் சந்தர்ப்பம், பாடவிதான ஒழுங்கிணைப்பு, கற்றலுக்காகத் திசைமுகப் படுத்தல்களை நிறுவுதல், ஒத்திசைவான உள்ளடக்கம், சிந்தனைத்திறன் மிக்க உரையாடல், பயிற்சியும் பிரயோகச் செயற்பாடுகளும், மாணாக்கர்கள் பணியில் ஈடுபடுவதற்கு மேலதிக உதவி வழங்குதல், உத்திகள் பற்றிக் கற்பித்தல், ஒத்துழைப்புடன் கற்றல், இலக்கை நோக்கிய அளவீடு, அடைவு பற்றிய எதிர்பார்ப்புகள் ஆகிய 12 தலைப்புகளில் இந்நூல் விரிகின்றது. ஜெரே ப்ரோஃபி மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் கல்விப்பிரிவின் பேராசிரியராவார்.

ஏனைய பதிவுகள்

Bestes Mr Bet Mobile Spielbank im Anno 2024

Content Vorhandene Games inoffizieller mitarbeiter Netz-Spielhaus Unser mobile App und mobile Fassung Sicherheit und Ernsthaftigkeit Within Mr Bet Mr Bet Inter seite unter anderem ein

Play Book Of Ra Slot

Content Spielen Sie ice queen Slots – Book Of Ra Fixed Gebührenfrei And Über Echtgeld Vortragen Wie gleichfalls Bekommt Man Book Of Ra Freispiele? Book