திருநாவுக்கரசு கமலநாதன். யாழ்ப்பாணம்: திருநாவுக்கரசு கமலநாதன் மணிவிழாக் குழு, யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி, தபால் பெட்டி எண் 01, கோப்பாய், 1வது பதிப்பு, மார்கழி 2006. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48B, புளுமெண்டால் வீதி).
xii, 46 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.
ஆசிரிய பரம்பரையை உருவாக்கிவரும் கோப்பாய் பிரதேசத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணத் தேசிய கல்வியியல் கல்லூரியின் வரலாற்றினை இவ்வமைப்பின் தாபகர், பீடாதிபதி கலாநிதி தி.கமலநாதன் அவர்களின் வாயிலாக இந்நூல் ஆவணப்படுத்துகின்றது. ஒரு தேசிய கல்வியியல் கல்லூரியை நிறுவுவதற்கான செயற்பாட்டில் தாம் எதிர்கொண்ட சிக்கல்கள் சவால்கள் என்பன விரிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 41063).