7231 சாரத்தியம்: சவால்களும் சாமர்த்தியமும்.

த.பேரின்பநாயகம். கொழும்பு: த.பேரின்பநாயகம், 1வது பதிப்பு, 2004. (கொழும்பு 5: Softwave Printing and Packaging Ltd, 107/D, Havelock Road).

152 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ., ISBN: 955-599-369-6.

ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் த.பேரின்பநாயகம் அவர்கள் எழுதியுள்ள இந்நூலில், மோட்டார் வாகனச் சாரதிகள் அறிந்திருக்க வேண்டிய அவசிய விடயங்கள் யாவும் மிகத்தெளிவான முறையில் தரப்பட்டுள்ளன. பாதுகாப்பாக மோட்டார் வாகனம் செலுத்துவதற்கு வேண்டிய அடிப்படைத் தகவல்களை இலகுவான மொழிநடையில் இந்நூல் வழங்குகின்றது. நீண்டகாலம் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பாய் இருந்த நூலாசிரியரின் அனுபவங்கள் இந்நூலின் படைப்பிற்கு உறுதுணையாகியுள்ளன. திரு பேரின்பநாயகம் போக்குவரத்து நிருவாகம், வீதிப்பாதுகாப்பு பணிப்பாளராகவும், போக்குவரத்துக்கான பிரதி பொலிஸ்மா அதிபராகவும் 15 ஆண்டுகள் சேவையாற்றியவர். தேசிய வீதிப் பாதுகாப்பு மன்றத்தின் தலைவராகவும் இலங்கை வீதி விபத்துகள் தடுப்புச் சங்கத்தின் தலைவராகவும் பணிபுரிந்தவர்.  இவரது சேவைகளுக்காக 2003ம் ஆண்டு சர்வோதய தேசிய விருதையும் பெற்றுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37327).

ஏனைய பதிவுகள்