குழந்தை ம.சண்முகலிங்கம். யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238 பிரதான வீதி, 1வது பதிப்பு, 1993. (கொழும்பு 13: லங்கா பப்ளிஷிங் ஹவுஸ்).
(4), 36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
இத்தொகுதியில் இடம்பெறும் மூன்று நாடகங்களும் இறைமகன் யேசு கூறிய மூன்று உவமைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. இவை அடிப்படையில் பெருமளவில் எமது பாரம்பரிய நாடக வடிவங்களில் ஒன்றான நாட்டுக்கூத்தினை அடித்தளமாகக்கொண்டு அமைக்கப்பட்டவை. உன் அயலவன் யார்?, நல்ல மேய்ப்பன் ஆகிய இரு நாடகங்களும் ஆண்டு 5க்கு உட்பட்ட மாணவர்களுக்கேற்றவகையில் எழுதப்பட்ட சிறுவர் கூத்துருக்கள். எதிர்கொள்ளக் காத்திருத்தல் என்ற நாடகம், யாழ். மறைக்கல்வி நடுநிலையத்தில் மறை ஆசிரியர்களாகப் பயிற்சிபெறுவோருக்காக பிரத்தியேகமாக எழுதப்பட்டது.