ஆ.தேவசகாயம்பிள்ளை. யாழ்ப்பாணம்: நாடகப் பிரதியாக்கப் பகுதி, திருமறைக் கலாமன்றம், 238 பிரதான வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு : லங்கா பப்ளிஷிங் ஹவுஸ்).
(8), 90 பக்கம், சித்திரம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×14.5 சமீ.
இந்நூல் பாஷையூர் புனித அந்தோனியார் பங்கைச் சார்ந்த புலவர் ஆ.செகராசசிங்கம் அவர்களால், பாஷையூர் கட்டளைக் குரவராக இருந்த அருட்திரு பிரான்சீஸ் அடிகளாரின் வேண்டுகோளின்பேரில் பாடப்பட்டு 1988ஆம் ஆண்டு ஆனி மாதம் 16ம் நாள் யாழ். ஆயர் மேதகு வ.தியோகுப்பிள்ளை ஆண்டகை, புலவர் அருள்திரு நீ.ம.சவரிமுத்து அடிகள், பாஷையூர்க் கட்டளைக்குரவர் எஸ்.ஜெபநேசன் அடிகள் முன்னிலையில் இந்நாடகம் அரங்கேற்றப்பட்டது. யோசவ்வாஸ் முனீந்திரர் இலங்கையின் அபோஸ்தலர் எனப் போற்றப்பட்டு புனிதப் பட்டம் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட காலகட்டத்தில் அவரது பணிகளைச் சித்திரிக்கும் இந்நாடகம் உருவாக்கப்பட்டது.