க.தா.செல்வராஜகோபால் (தெகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: மாவட்ட கலாசாரப் பேரவை, 1வது பதிப்பு, டிசம்பர் 1985. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம்).
(4), 64 பக்கம், விலை: ரூபா 5., அளவு: 18×12.5 சமீ.
மட்டக்களப்பு மாநிலத்தில் கர்ணபரம்பரையாக வழக்கிலிருந்த பல உபகதைகளின் தொகுப்பு இதுவாகும். கதிர்காமத்துக்குப் பலாப்பழம், பஞ்சமிப் பேய்க்கதை, ஒட்டுவக்கான் ஒட்டு, சூடுதிருப்பியும் தட்டுக்குத்தியும், நாககட்டுக் கதை, பூனை வீடுகட்டிய கதை, கல்லுமாடு புல்லுத் தின்ற கதை, யோதயன் கட்டு, ஆக்காண்டி ஆக்காண்டி, தாந்தி என்றேன் ஓந்தி என்றேன், அது எனக்காகாது இது உனக்காகாது, காகமும் கிளியும், பூரணையமுதுக் கதைகள், தவிட்டுப் பிட்டும் தாரா இறைச்சியும், ஆணலை பெண்ணலை அல்லது புன்னைமரக் கதை, ஆலாவும் நரியும், வாளைமீன் கதை ஆகிய 17 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 435932).