முடியப்பு அருள்பிரகாசம். யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238 பிரதான வீதி, 1வது பதிப்பு, 2006. (யாழ்ப்பாணம்: வஸ்தியான்அச்சகம், சுண்டுக்குளி).
xiv, 55 பக்கம், சித்திரம்;, விலை: ரூபா 100., அளவு: 20.5×15 சமீ.
கலைச்செல்வர், கூத்திசைப்பாவலன், மரபுக்கலைச்சுடர் ஆகிய பட்டங்களைப் பெற்ற அண்ணாவியார் மு.அருள்பிரகாசம் எழுதிய 17ஆவது நூல் இது. பாசையூர் புதுவையூர் கலாமன்றம் பதிப்பரிமை பெற்றது. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்துவதாக இந்நாட்டுக்கூத்து அமைக்கப்பட்டுள்ளது. அந்நியப் படையெடுப்புகளுக்குப் பணியாது நீண்டகாலம் எதிர்த்துநின்ற கண்டி அரசின் மன்னனான ஸ்ரீவிக்கிரமராசசிங்கனின் கதை. இந்திய நாயக்க வம்சத்துத் தமிழனான கண்ணுச்சாமி (ஸ்ரீவிக்கிரம ராசசிங்கன்) மீது கொண்ட காழ்ப்புணர்வினாலேயே ஒரு சில சிங்களப் பிரதானிகள் சூழ்ச்சியின்மூலம் அவனை அந்நியரிடம் காட்டிக்கொடுத்தனர் என்று இக்கூத்துரு வெளிப்படுத்துகின்றது. அதேவேளை மன்னன் போரில் தோற்று மறைவிடம் தேடியவேளையில் சிங்களவரான உடுப்பிட்டிய கெதர அப்புராள ஆராச்சி என்பவனே மன்னனுக்குப் புகலிடம் தந்து அதன்காரணமாகத் தன் உயிரையும் விலையாகக் கொடுக்கவேண்டி நேர்ந்ததையும் இந்நாடகம் பதிவுசெய்கின்றது. இந்நூல் 2006ஆம் ஆண்டு இலங்கை இலக்கியப் பேரவையின் விருது பெற்றது.