7249 மாவீரன் சங்கிலியன்: நாட்டுக்கூத்து.

முடியப்பு அருள்பிரகாசம். யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238 பிரதான வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2010. (யாழ்ப்பாணம்: வஸ்தியான் அச்சகம், சுண்டுக்குளி).

(16), 56 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.

நாட்டுக்கூத்துக் கலைஞர் கலாபூஷணம் மு.அருள்பிரகாசம், நாட்டுக்கூத்தினை வழிவழியாகப் பேணிவரும் பாசையூர் கிராமத்தை வாழ்விடமாகக் கொண்டவர். இக்கிராமத்தைச் சேர்ந்த நாட்டுக்கூத்துப் புலவர்களான அதிரியார், சுவாம்பிள்ளை, தொம்மையர், மிக்கோர்சிங்கம், கிறிஸ்தோப்பர், செகராசா, சூசைப்பிள்ளை, ஆகியோர் வரிசையில் புகழ்பெற்ற இவர், புலவராக மாத்திரமின்றி மேடைக் கலைஞராகவும் அறியப்பட்டவர். மாவீரன் சங்கிலியன் நாட்டுக்கூத்து நூல் முடியப்பு அருள்பிரகாசத்தின் நாட்டுக்கூத்து வடிவத்தையும் கவித்துவத்தின் மகிமையையும் கோடிட்டுக்காட்டுவதாக அமைந்துள்ளது. பாடல்கள் விருத்தங்கள் மிகவும் நேர்த்தியாக மரபுவழியில் இருக்கின்றன. வீரம், ஆவேசம், வஞ்சகம், காதல் பாடல்களுக்கான மெட்டுகள் ஆங்காங்கே வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்