சொக்கன் (இயற்பெயர்: க.சொக்கலிங்கம்). யாழ்ப்பாணம்: யாழ். இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, நவம்பர் 1993. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் அச்சகம், நல்லூர்).
x, 34+xvi பக்கம், விலை: ரூபா 45., அளவு: 20×14 சமீ.
யாழ். இலக்கிய வட்டத்தின் 54ஆவது வெளியீடாக இந்நாட்டுக்கூத்து – கவிதை நாடக நூல் அமைகின்றது. போர்த்துக்கீசரை எதிர்த்துநின்று யாழ்ப்பாண மண்ணைக் காக்க முனைந்தவன் சங்கிலியன். பரராச சேகர மன்னனின் காமக்கிழத்தியின் மகன், துட்டன், தமையனாகிய பரநிருபசிங்கனுக்குரிய அரசுரிமையைச் சூழ்ச்சியாலே கவர்ந்துகொண்டவன், தனது மகன் உள்ளிட்ட மதமாற்றத்துக்குட்பட்ட அறுநூறு பேர்களை ஈவிரக்கமின்றிக் கொன்றொழித்தவன் என்றவாறாக சங்கிலியனின் வரலாறு திரிபுபடுத்தப்பட்டு வழக்கிலிருந்தபோதிலும், அந்நியனின் ஆக்கிரமிப்பினை துணிவுடன் எதிர்த்துப் போரிட்டவன் என்பதாலும், அவனது வீழ்ச்சிக்கு உட்பகைவரின் துரோகமே காரணம் என்பதாலும் சொக்கன், சங்கிலியன்மேல் மதிப்புவைத்து இவ்விலக்கியத்தைப் படைத்துள்ளார். இந்நாட்டுக் கூத்து இலக்கியம், இலங்கை இலக்கியப் பேரவையின் பாராட்டுச் சான்றிதழைப் பெற்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் P.1767).