ம.நேசராஜ். யாழ்ப்பாணம்: ம.நேசராஜ், மானிப்பாய் வீதி, தாவடி, 1வது பதிப்பு, யூலை 2005. (யாழ்ப்பாணம்: நோபல் பிரிண்டர்ஸ், பலாலி வீதி).
(4), 70 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 120., அளவு: 19×13.5 சமீ.
குடும்பப்பொறுப்புகள், அலுவலகப் பிரச்சினைகள், தனிமை, வறுமை எனப் பல பிரச்சினைகளுக்கும் முகம்கொடுக்கும் இன்றைய பெண்கள் மன இளமையுடனும், உடல் ஆரோக்கியத்துடனும் வாழ யோகக்கலை எவ்வாறு உதவுகின்றது என்பதை இந்நூல் விளக்குகின்றது. யோகக் கலை, யோகாசனம் பழகுவதால் ஏற்படும் நன்மைகள், குணமாகும் நோய்கள், பெண்கள் யோகாசனம் செய்யத் தொடங்கும் முன்னர் கவனிக்கவேண்டிய முக்கிய அம்சங்கள், உணவு முறை, விழிப்புணர்வுக்கான மூச்சுப் பயிற்சிகள், உடலைத் தளர்த்தும் பயிற்சிகள், சாந்தி ஆசனம், நின்றபடி செய்யும் ஆசனங்கள், உட்கார்ந்து செய்யும் ஆசனங்கள், நேராகப் படுத்திருந்து செய்யும் ஆசனங்கள், குப்புறப் படுத்திருந்து செய்யும் ஆசனங்கள், சிரசாசனம், நாடிசுத்திப் பிராணாயாமம், தியானம் ஆகிய தலைப்புகளில் இந்நூல் விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 160551).