7380 சித்த மருந்தியலும் மருந்தாக்கவியலும்.

சே.சிவசண்முகராஜா. யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம், 442, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2001. (யாழ்ப்பாணம்:  பாரதி பதிப்பகம், 430 காங்கேசன்துறை வீதி).

x,117 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.

ஆசிரியர் தான் கற்ற நவீன மருந்தியல், உயிர் இரசாயனவியல், சித்த மருத்துவ நூல்கள் ஆகியவற்றின் துணைகொண்டு இந்நூலை உருவாக்கியுள்ளார். சூரணம், கஷாயம், பஸ்பம், செந்தூரம், லேகியம், எண்ணெய் என்று பெயரளவில் மாத்திரம் அறியப்பட்ட சித்த மருத்துவ மருந்தியலை விஞ்ஞானபூர்வமாக இந்நூல் அணுகுகின்றது. உதாரணமாக கோரோசனை மாத்திரை பற்றி இன்றளவில் அது பாலவாகடத்தில் உள்ளதா அன்றேல் பரராசசேகரத்திலா, அல்லது சித்தவைத்தியத் திரட்டிலா உள்ளது என்று மட்டும் குழம்பிக் கிடப்பதிலேயே காலத்தைச் செலவிடுவோரைச் சாடி, இந்நூலாசிரியர் மருந்தியல், மருந்தாராய்வுகளில் (ஒளடதபாகவியல்)துரிதமாக ஈடுபடுவதில் நேரத்தைச் செலவிடுமாறு வேண்டுகின்றார்.  இந்நூல் கேள்வி பதில் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. சித்த மருந்தியலை நவீன மருந்தியல் போன்று ஒழுங்குபடுத்தும் முயற்சியில்  இந்நூல் முன்னோடியாக அமைந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25434/25435).

ஏனைய பதிவுகள்

Wytyczne skrill kasyno zabawy

Content Skrill kasyno – Uprawnienie hazardowa natomiast poker Jakie będą wzory uciechy w Blackjacka? Pewną spośród najważniejszych strategii w Blackjacku wydaje się komitywa tabeli procedury