7384 பிள்ளைகளின் அன்பு நலன் கருதி.

மொறீன் செனெவிரத்ன (ஆங்கில மூலம்), புஷ்பா சிவகுமாரன் (தமிழாக்கம்). கல்கிசை: சுற்றாடலையும் எங்குமுள்ள பிள்ளைகளையும் பாதுகாத்தல்,  PEACE, தபால் பெட்டி எண் 58, மௌண்ட் லவீனியா, 1வது பதிப்பு, 2001. (கொழும்பு: First Impressions).

(8), 84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 955-8309-04-4.

பீஸ் இயக்கத்தின் ஆவணக்குறிப்பாக வெளிவரும் இந்நூல் பீஸ் இயக்கத்தின் பத்தாண்டுத் தொடர்ச்சியான பிரச்சாரம் பற்றிய ஒரு சொந்தக் கருத்துரையாகவும் அமைகின்றது.  பாதுகாப்பிற்கான உரிமைகள், வரைவிலக்கணங்கள், நமது சின்னம், ஆசிய சுற்றுலாப் பயணத்துறையில் சிறுவர் விபச்சாரத்திற்கு முடிவுகட்டும் (நுஊயுPவு) சர்வதேச இயக்கத்தின் கதையிலிருந்து, முதலில் சில வார்த்தைகள், ஆசிய சுற்றுலாப் பயணத்துறையில் சிறுவர் விபச்சாரத்திற்கு முடிவு கட்டும் (ECAPT) சர்வதேச இயக்கத்துடனான இணைப்பு, ஐக்கிய நாடுகள் அமையத்தின் முகவரகங்கள் அரசாங்க முகவரகங்கள் என்பவற்றுடனும் நன்கொடை வழங்குவோருடனுமான இடைச் செயற்பாடு, சட்டப் பரிந்துரை, கண்காணிப்பு என்பவற்றிற்குப் பீஸ் இயக்கத்தின் பங்களிப்பு, பீஸ் இயக்கத்தின் செயற்பாடுகளின் விரிவெல்லை, மலரும் மொட்டுக்கள் (பிபென குசும்) வலையமைப்பு,  நம்மால் மறக்க முடியாது ஆகிய பல்வேறு தலைப்புகளில் இந்நூல் விரிகின்றது.  சிறுவர் விபச்சாரம் தொடர்பான ஒன்பது பின்னிணைப்புகளும் இந்நூலின் பக்கம் 57-84 வரை நீள்கின்றன. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 549971).

ஏனைய பதிவுகள்

Bingo Online Acostumado

Content Revisão Pressuroso Aparelho Infantilidade Slot Zeus Como Aprestar Slots Online Acimade Cassinos Escolhendo Briga Acabamento Caça Outros Slots Da Bf Games Símbolos Wild E

Starlight Kiss Slot 100 tours non payants

Aisé Starlight Princess 1000 Epic Win dans vidéo officielle Découvrez les pourboire , ! encarts publicitaires Vogue de fonctionnement du jeu d’action Notables situation par