7399 வட மராட்சியின் இசைப் பாரம்பரியம்: நினைவுகளும் பதிவுகளும். 

வரதராஜன் (நினைவுமலர்க்குழுவின் சார்பாக). கரவெட்டி: சங்கீதபூஷணம் கலாபூஷணம் திருமதி இராசம்மா மரியாம்பிள்ளை நினைவு வெளியீடு, 1வது பதிப்பு,  பெப்ரவரி 2005. (வத்தளை: கிறிப்ஸ் பிரிண்டர்ஸ், 70/7 கனல் வீதி, ஹெந்தளை).

144 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.

கரவெட்டி திரு இருதயக் கல்லூரி, சென் ஜேம்ஸ் மகாவித்தியாலயம், பண்டாரவளை சிறுமலர் கன்னியர் மடம் ஆகியவற்றில் சங்கீத ஆசிரியராகப் பணியாற்றி மறைந்த திருமதி இராசம்மா மரியாம்பிள்ளை அவர்களின் நினைவாக வெளியிடப்பட்ட இந்நூலில் வடமராட்சியின் இசைப் பாரம்பரியத்தின் சமூக வரலாற்றுப் பின்னணி, வடமராட்சி வாய்ப்பாட்டு இசைக் கலைஞர்கள் ஆகிய விடயங்களுடன் ஈழத்தில் இசையும் சமூக மாற்றங்களும் (என்.சண்முகலிங்கன்),  நவீன கவிதையில் இசையுண்டோ (செ.யோகராசா), ஈழத்து மெல்லிசைப் பாடல்கள் (க.விக்கினேஸ்வரன்), இசைத்துறையில் தமிழரின் பங்களிப்பு ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36885).

ஏனைய பதிவுகள்