குழந்தைவேல் சிவகுமார். கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி).
71 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-175-0.
புதிய கல்வித் திட்டத்தில் சிறுவர் அரங்கிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக இந்நூல் தரம் 2-13 வரையிலான வகுப்புகளுக்கும், ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கும் ஏற்றவகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நூலில் சிறுவர் அரங்கு, சிறுவர் நாடகம் எழுதும்போதும் தயாரிக்கும்போதும் கருத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள், சிறுவர் அரங்கப் பயிற்சிகள், சிறுவர் அரங்கக் கேட்பியல்-காண்பியல் மூலங்கள், சிறுவர் அரங்கின் பயன்கள், அரங்க விளையாட்டுக்கள் போன்ற விடயங்கள் சிறுவர் அரங்கு தொடர்பான முழுமையான விளக்கத்தைக் கொண்டிருப்பது நூலுக்கு மெருகூட்டுகின்றது. இந்நூல் நாடகத்தை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக அமையும். குழந்தைவேல் சிவகுமார் யாழ். இளவாலை புனித ஹென்றியரசன் கல்லூரியில் கல்விகற்றவர். யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியில் நாடகமும் அரங்கியலும் துறையில் பயிற்சிபெற்றவர். தற்போது யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் உள்ளகப் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.