7426 நாய்க்குட்டி ஊர்வலம்: சிறுவர் நாடகங்கள் மூன்றாம் தொகுதி.

மாவை நித்தியானந்தன். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 6: குமரன் அச்சகம்;, 39, 36ஆவது ஒழுங்கை).

viii, 80 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-1997-30-4.

13 வயதுக்கு மேற்பட்டோர் நடிக்கவும், ரசிக்கவும் இந்த நாடகங்கள் ஏற்றவை. அரசனின் புத்தாடை, முட்டை நாடகம், ஒன்று இரண்டு மூன்று, படிக்க ஒரு பாடம், நாய்க்குட்டி ஊர்வலம் ஆகிய ஐந்து நாடகங்களை இத்தொகுதி உள்ளடக்குகின்றது. மாவிட்டபுரத்தில் பிறந்த மாவை நித்தியானந்தன் தொழில்ரீதியாக ஒரு பொறியியலாளராவார். 70களில் மொரட்டுவையில் உயர்கல்வி கற்றவேளையில் நாடகத்துறையில் ஈடுபாடுகொண்டு அதன் பின் ஈழத்தமிழர்கள் மத்தியில் பல நாடகங்களால் இவர் அறியப்பட்டவர். இவரது நாடகங்களை அரசியல் அங்கத நாடகங்கள் மற்றும் சமூக அங்கத நாடகங்கள் என இருவகைப்படுத்தலாம். திருவிழா என்ற இவரது நாடகம் ஈழத்தமிழர் மத்தியில் தோன்றிய முதல் தெருவெளி நாடகமாகக் கருதப்படுகின்றது. 1989இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தபின்னர் இவர் தயாரித்த கண்டம் மாறியவர்கள் என்ற அரசியல் அங்கதச்சுவைமிகு நாடகம் புகலிடத்தில் பிரபல்யமாகியது. 1994முதல் அவுஸ்திரேலியாவில் சிறுவர்களுக்காகப் பாரதி பள்ளியை நடத்திவருகிறார்.

ஏனைய பதிவுகள்

15254 பாடசாலையில் ஆலோசனை வழங்கல்.

பா.தனபாலன், ஞானசக்தி கணேசநாதன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, திருத்திய 2வது பதிப்பு, 2021, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39,