7433 பிறந்த மண்: சிறுவர் கதைகள் (பகுதி 2).

வடகோவை பூ.க.இராசரத்தினம். கொழும்பு 13: கீதா பதிப்பகம், 1வது பதிப்பு, மே 2009. (கொழும்பு  6:  P.மு.சு. பப்ளிக்கேஷன்ஸ், 36 A/2, 37ஆவது ஒழுங்கை).

56 பக்கம், விலை: ரூபா 125., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-1444-05-1.

சிறுவர்களின் சிந்தனையைத் தூண்டும் பதினேழு சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. சிறுவர்களை வளர்ந்தோரின் சிற்றுருவங்களாகக் காணாது, அவர்களுக்கேயுரிய தனித்துவங்களுடன் நோக்கும் இலக்கிய மரபை இந்நூலாசிரியர் மீள வலியுறுத்திச் செல்கிறார். பிறந்த மண், சிற்பிகள், முறிந்த கால்-முறியாத மனம், சுகாதார தொழிலாளியின் தூய உள்ளம், விலை மதிக்க முடியாத சொத்து, குரு பக்தி, எருதுகளுக்கு ஏற்பட்ட கதி, அறிவா அனுபவமா, தாத்தாவும் பேரனும், உயரப் பறக்க விரும்பியவர், திடீரெனத் தோன்றிய பேய், தோல்வி வெற்றியாக மாறியது, வைர நெக்கிலஸ், தன் இனத்துக்கு பெருமை தேடிய செல்லப் பிராணி, வேர்களைப் பேச அனுமதித்தால், ஊக்கமது கைவிடேல், தவறு இளைப்பவர்கள் பிறப்பதில்லை ஆனால் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 17 கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.

ஏனைய பதிவுகள்