வசந்தி தயாபரன் (கதை), வி.சுப்பிரமணியம் (விளக்கச் சித்திரங்கள்). கொழும்பு 6: Room to read Sri Lanka, இல. 14, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு: graphitec Pvt. Ltd).
16 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21 சமீ., ISBN: 978-955-1520-42-7.
எப்போதும் குடையோடு நடக்கின்ற மனிதன் ஒருவனின் அழகான கதை. வெயிலோ மழையோ இல்லாத பொழுதுகளிலும் அழுக்கான ஒரு பெரிய குடையைத் தன்னுடனே கொண்டுசெல்லும் அவரை தாயுடன் செல்லும் சிறுமி ஒருத்தி அடிக்கடி காண்கிறாள். குடையினால் ஏற்படும் இடைஞ்சல்களே கதையின் பெரும்பகுதி. பஸ்சில் ஏற்றமறுத்து அவரை நடையிலேயே தன் பயணத்தை மேற்கொள்ளவைக்கின்றது சமூகம். இறுதியில் அவர் ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியாக அறியப்படுகிறார். அவசரத்திற்குத் தாயின் அறுந்த செருப்பையே தைத்துத்தரும் அவரது குடையே அவரது கடையாக இருப்பதை சிறுமி காண்கிறாள். வசந்தி தயாபரன் இலங்கை வங்கியின் முன்னாள் அலுவலர். இலக்கியத்தின் மீது மிகுந்த ஈடுபாடுள்ளவர். தகவம் என்ற தமிழ் இலக்கிய அமைப்பின் செயலாளர். தினகரன் பத்திரிகையின் ஓவியராகப் பணியாற்றும் வி.சுப்பிரமணியனின் ஓவியங்கள் நூலின் பெறுமதியை அதிகரிக்கின்றன.