ஈழவாணன். (இயற்பெயர்;: எம்.தர்மராஜா). கொழும்பு 3: கலசம் பப்ளிக்கேஷன்ஸ், 30, சீ அவென்யு, 1வது பதிப்பு, டிசம்பர் 1973. (கொழும்பு: ரஞ்சனா அச்சகம்).
(6), 72 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 18.5×12.5 சமீ.
மாதம் ஒரு நூல் என்ற வகையில் தனது முதலாவது நூலாக கலசம் வெளியீட்டகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. கொழும்பிலிருந்து கனக.பாலசுப்பிரமணியம் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இத்திட்டம் தொடக்கப்பட்டது. கலசம் வெளியீடாக பிரசுரமான முதலாவது நூல் என்ற பெருமையை இக்கவிதை நூல் பெறுகின்றது. நூலாசிரியர் ஈழவாணன் திருக்கோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.